
2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியதில் இருந்து, விராட் கோலியின் கேப்டன் பதவி ஒவ்வொரு வடிவத்திலாக முடிவுக்கு வந்தது. இதற்குப் பின் விராட் கோலி ஒரு வீரராக இந்திய அணிக்கு பேட்ஸ்மேன் ஆக மட்டும் இல்லாமல் ஒரு ஊக்க சக்தியாகவும் சிறப்பான பங்களிப்பை களத்தில் வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவர் இழந்திருந்த பேட்டிங் பார்மையும் மீட்டெடுத்து விட்டார்.
இந்த நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் காயம் குணமடைந்து ஒன்று சேர்ந்து விளையாடி வருகிறார்கள். இவர்கள் ஒருங்கிணைந்த அணியாக இருக்கும் பொழுது மிகவும் அபாயகரமான அணியாக வெளிப்படுகிறார்கள். இதற்கு முன் வீரர்களின் காயம் இந்திய அணியை மிகவும் கீழாக காட்டியது.
இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார்கள். தற்பொழுது அவர்களின் முயற்சிகளுக்கான பலன் கிடைத்திருக்கிறது. ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “அவர் எப்பொழுதும் இயல்பாக இருக்கிறார். அவர் விளையாடும் விதத்தில் கூட நீங்கள் அதைக் காணலாம். அவர் ஒரு அழகான லாகோனிக் பேட்ஸ்மேன். அதேபோல் அவர் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிறார்.