
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ள வேளையில் தனது 71ஆவது சதத்திற்காக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சதம் அடிக்காமல் இருந்து வருவதன் காரணமாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி சமீப காலமாகவே அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமான நிலையில் சரிந்திருக்கும் வேளையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து பேட்டி அளித்திருந்த சாஹல் கூறுகையில், “டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி இன்றளவும் 50-க்கும் மேற்பட்ட சராசரியை வைத்துள்ளார்.
அதோடு இரண்டு டி20 உலக கோப்பையில் அவர் இந்திய அணியின் நாயகனாகவும் இருந்துள்ளார். அது மட்டுமின்றி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர் 70 சதங்கள் விளாசியுள்ளார். இங்கே பிரச்சனை யாதெனில் எல்லா போட்டிகளிலும் விராட் கோலி களமிறங்கினாலே சதம் அடிக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.