-mdl.jpg)
9ஆவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரானது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து முல்தான் சுல்தான்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - உஸ்மான் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் உஸ்மான் கான் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த ரிஸா ஹென்றிக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 77 ரன்க்ள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 51 ரன்களை எடுத்திருந்த ரிஸ்வான் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரி, 4 சிச்கர்கள் என 72 ரன்களைச் சேர்த்திருந்த ரீஸா ஹென்றிக்ஸும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய தஹிர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முதல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தார்.