
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர் . ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . இதில் இரு அணிகளுக்கும் இடையே நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது . ஆஸ்திரேலியா அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதன் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரர் சட்டேஷ்வர் புஜாரா நூறாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார் . இதன் மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடியா வீரர்களின் பட்டியலில் புஜாராவும் இடம்பெறப் போகிறார் .
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் எழுதியுள்ள கட்டுரையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய் மற்றும் புஜாரா இவர்கள் இருவருக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அந்த கட்டுரையில் எழுதியுள்ள அஸ்வின், “புஜாரா மற்றும் விஜய் ஆகிய இருவரும் அணிக்காக மிகவும் கடுமையான பணியை சுமந்தவர்கள் ஆனால் இந்தியாவில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் இந்த வீரர்களுக்கு சற்று குறைவாகவே கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.