
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே யான டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பை காண நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 1ஆம் தேதி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வைத்து நடைபெற இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் மார்ச் 17ஆம் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை இரண்டு அணிகளும் சமீபத்தில் வெளியிட்டன.
வருகின்ற அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இந்திய அணி கடந்த 12 ஆண்டுகளாக உலகக் கோப்பையை வெல்லவில்லை. 2011 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியை தழுவியது.