டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் எதிர்காலம் என்ன? ராகுல் டிராவிட் பதில்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தந்த பதிலால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. முதல் 2 போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியா தொடரை வென்றுவிட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த முறையும் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 தொடர் மூலம் தான் விராட் கோலி கம்பேக்கே கொடுத்திருந்தார். டி20 உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அப்படிபட்ட வீரர் ஒதுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். மறுபுறம் இனி சீனியர் வீரர்கள் டி20 திட்டத்தில் இல்லை என பிசிசிஐ கூறி வருகிறது.
Trending
இந்நிலையில் இதுகுறித்து டிராவிட் விளக்கம் தந்துள்ளார். டிராவிட்டிடம், கடந்தாண்டு வரை டி20 அணியில் விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாக இருந்தது என செய்தியாளர் கேள்வி கேட்க தொடங்கினார். உடனடியாக குறிக்கிட்ட டிராவிட், எங்களால் அவரின் இடத்திற்கு சந்தேகம் தெரிவிக்கப்படவில்லையே, எங்களால் என்றுமே அப்படி நடக்காது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொரு தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள், பார்டர் கவாஸ்கர் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என சில முக்கிய போட்டிகள் உள்ளன. பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றால், ஒரு சில தொடர்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்படும்.
விராட் கோலி தொடர்ச்சியாக 6 ஒருநாள் போடிகளில் ஆடியுள்ளார். எனவே அடுத்த சில நாட்களுக்கு கோலி, ரோகித் உள்ளிட்ட சிலர் ஓய்வெடுத்துவிட்டு வருவார்கள். அதற்குள் டி20 தொடர்கள் நடந்துவிடும். அப்போது தான் ஆஸ்திரேலிய தொடருக்கு புத்துணர்ச்சியுடன் களமிறங்குவார்கள். இதுதான் உண்மையான காரணம்” என டிராவிட் கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now