Advertisement

முதல் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா? - ராகுல் டிராவிட் பதில்!

டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லின் உடல்நிலை குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தகவலை தெரிவித்துள்ளார்.  

Advertisement
முதல் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா? - ராகுல் டிராவிட் பதில்!
முதல் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா? - ராகுல் டிராவிட் பதில்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 06, 2023 • 07:31 PM

நேற்று ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. உலகக் கோப்பைக்கு நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கும் விதமாக, முதல் போட்டியில் பலமான இங்கிலாந்து அணியை மிக எளிதாக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 06, 2023 • 07:31 PM

இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஐந்து முறை வென்ற ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கத்தில் அக்டோபர் 8ஆம் தேதி எதிர்கொள்கிறது. நடப்பு உலகக் கோப்பை பயணம் இந்திய அணிக்கு தமிழகத்தில் இருந்து துவங்குகிறது. இதற்கு முன்பாக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்சமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி இருந்தது.

Trending

இப்போட்டிக்கு இன்னும் ஒரு நாள் இடையில் இருக்கும் நேரத்தில் திடீரென இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இது கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. இந்த நிலையில் காலையில் இந்த விஷயம் தொடர்பாக காலையில் தெரிவித்த இந்திய அணி நிர்வாகம், முடிவு என்னவென்று மாலை 6:00 மணிக்கு தெரிவிப்பதாக கூறியிருந்தது. 

இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். அதில் கில் உடல்நிலை குறித்தும், மேலும் அதற்கான மாற்று வீரர்கள் யாராக இருப்பார்கள்? என்பது குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஷுப்மன் கில்லின் உடல் நிலையில் இன்று முன்னேற்றம் இருக்கிறது. போட்டிக்கு இன்னும் நடுவில் 36 மணி நேரங்கள் இருக்கிறது. அவர் போட்டியில் இருந்து இன்னும் ரூல்டு அவுட் ஆகவில்லை. நாங்கள் நிலைமைகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். கில் விஷயத்தில் கடைசி நிமிடத்தில் கூட நாங்கள் முடிவெடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் சூர்யகுமாருக்கான வாய்ப்பு பற்றி பேசிய டிராவிட் “சூர்யகுமார் யாதவ் எப்பொழுதும் சிறந்த வீரர். அவர் சில விஷயங்களில் உழைத்து வருகிறார். அவர் சில விஷயங்களில் கற்றுக் கொண்டிருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அவரது பொதுவான வழியை தவிர்த்து சில வழிகளை கண்டுபிடிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். தற்பொழுது அவர் அதில் சிறப்பான உழைப்பை செலுத்தி கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார். 

மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினால், இந்திய அணி சுழற்பந்து வீச்சில் மூன்று வீரர்களைக் களம் இறக்கி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் மூவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement