முதல் இன்னிங்ஸில் நாங்கள் 70-80 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும் - ராகுல் டிராவிட்!
தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடியதை இதற்கு முன் பார்த்ததில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தைக் காட்டிலும் 190 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையிலும், இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இதன்மூலம் முதல் முறையாக முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றும் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்நிலையில் தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடியதை இதற்கு முன் பார்த்ததில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஹைத்ராபாத் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். ஆனால் முதல் இன்னிங்ஸில் எங்கள் வீரர்கள் அதனைத் தவறவிட்டார்கள். அந்த இன்னிங்ஸில் நாங்காள் 70 ரன்கள், 80 ரன்கள் என கூடுதலாக அடித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் குறைவாக ரன்கள் அடித்தாலும் அது வெற்றிக்கு வழிவகுத்திருக்கும்.
Trending
இந்த நேரத்தில் இங்கிலாந்தின் பாஸ்பால் யுக்திக்கு நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்கள் தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடியனர். இதுபோன்ற ஒன்றை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. இதற்கு முன்பு விளையாடியவர்கள் இதுபோன்று வித்தியாசமான யுக்திகளை எப்போதாவது பயன்படுத்தி சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடுவார்கள். ஆனால், இந்த போட்டியில் ஒல்லி போப் தொடர்ச்சியாக தவறுகள் எதுவும் செய்யாமல் விளையாடியது புதிதாக உள்ளது.
ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை பலமுறை விளையாடி பந்துவீச்சாளர்களுக்கு ஒல்லி போப் அழுத்தத்தை ஏற்படுத்தினார். பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரையில் இன்னும் நாம் சரியாக செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். இதனை எப்படி திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக திட்டமிட்டு அடுத்தடுத்தப் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும். எங்கள் அணி வீரர்கள் முதல்முறையாக சவாலை சந்திப்பவர்கள் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now