Advertisement
Advertisement
Advertisement

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!

ஆஸ்திரேலிய அண்டர்19 அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அண்டர் 19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

Advertisement
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 31, 2024 • 11:49 AM

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அண்டர்19 கிரிக்கெட் அணியானது இந்திய அண்டர்19 அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், இரண்டு நான்கு நாள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது செப்டம்பர் 21ஆம் தேதியும், நான்கு நாள் தொடரானது செப்டம்பர் 30ஆம் தேதியும் தொடங்கவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 31, 2024 • 11:49 AM

மேலும் இத்தொடரின் ஒருநாள் போட்டிகள் அனைத்தும் புதுச்சேரியிலும், நான்கு நாள் போட்டிகள் அனைத்தும் சென்னையில் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனையடுத்து இத்தொடர்களுக்கான இந்திய அண்டர் 19அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அத்னபடி, உத்திரபிரதேச வீரர் முகமது அமான் ஒருநாள் அணிக்கும், மத்தியபிரதேச வீரர் சோஹம் பட்வர்தன் நான்கு நாள் அணிக்கும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

Trending

மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அண்டர்19 அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். தாற்போது கர்நாடகாவில் நடைபெற்றுவரும் மகாராஜா கோப்பை கிரிக்கெட் தொடரில் மைசூர் வாரியர்ஸ் அணியாக விளையாடி வரும் சமித் டிராவிட், இத்தொடரில் பெரிதளவில் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அண்டர்19 ஒருநாள் அணி: முகமது அமன் (கேப்டன்), ருத்ரா படேல், சாஹில் பராக், கார்த்திகேயா கேபி, கிரண் சோர்மலே, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங் பங்கலியா, சமித் டிராவிட், யுத்ஜித் குஹா, சமர்த் என், நிகில் குமார், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ், ரோஹித் ரஜாவத் , முகமது இனான்

Also Read: Funding To Save Test Cricket

இந்திய அண்டர்19 நான்கு நாள் போட்டிக்கான அணி: முகமது அமன் (கேப்டன்), ருத்ரா படேல், சாஹில் பராக், கார்த்திகேயா கேபி, கிரண் சோர்மலே, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங் பங்கலியா, சமித் டிராவிட், யுத்ஜித் குஹா, சமர்த் என், நிகில் குமார், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ், ரோஹித் ரஜாவத் , முகமது இனான்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement