-mdl.jpg)
Ramiz Raja identifies major flaw despite Rohit Sharma and Co.'s NZ ODI win (Image Source: Google)
கடந்த 2021 டி20 உலக கோப்பை, 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என அடுத்தடுத்து ஐசிசி தொடர்களில் தோற்று ஏமாற்றமளித்த இந்திய அணி, அடுத்ததாக இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது.
ஒருநாள் உலக கோப்பைக்காக 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்து, அவர்களை ஒருநாள் கிரிக்கெட்டில் சுழற்சி முறையில் களமிறக்குகிறது பிசிசிஐ. ஒருநாள் உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஒருநாள் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். ஷுப்மன் கில், இஷான் கிஷன் ஆகிய இளம் வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு, தவான் ஓரங்கட்டப்பட்டார். இஷான் கிஷன், ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைத்ததுமே, ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை படைத்தனர்.