
Rashid Khan describes Virat Kohli, AB de Villiers, Babar Azam, Yuvraj Singh, and MS Dhoni in one wor (Image Source: Google)
இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனால் தற்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது நாடுகளுக்கு திரும்பி அடுத்தடுத்து தொடர்களுக்கு தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலமாக தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதன்படி ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக பதில் அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கானிடம் ரசிகர்கள் தங்களது தொடர்ச்சியான கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.
இதில் தோனி குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த ரஷித் கான்தோனி குறித்து சொல்ல ஒரு வார்த்தை போதாது என்று பதிலளித்துள்ளார்.