Advertisement

விராட் கோலியின் ஃபார்ம் இழப்பிற்கான காரணத்தை விளக்கிய அஸ்வின்!

கடந்த சில வருடங்களாக விராட் கோலி சதமடிக்காதது குறித்த காரணங்களை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கியுள்ளார்.

Advertisement
Ravichandran Ashwin on Virat Kohli:
Ravichandran Ashwin on Virat Kohli: "ODI cricket is the place where he brought the genius in him to (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 15, 2023 • 01:34 PM

இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய வீரர்களில் இந்திய அணியில் தற்பொழுது விளையாடி வரும் விராட் கோலியும் ஒருவர். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் வேகம் என்பது இதுவரை கிரிக்கெட் உலகம் காணாத ஒன்று. ஒருநாள் கிரிக்கெட்டின் அடையாள வீரராக பார்க்கப்படுகிற சச்சின் சாதனைகளை சீக்கிரத்தில் கடக்க கூடிய இடத்தில் விராட் கோலி இருக்கிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 15, 2023 • 01:34 PM

இப்படிப்பட்ட விராட் கோலிக்கு கடந்த ஒரு ஆயிரம் நாள்கள் மிக சோதனையான காலகட்டமாகவே பேட்டிங்கில் இருந்தது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் காலகட்டத்திற்கு மேல் அவரிடமிருந்து சதங்கள் வரவில்லை. பிறகு அரை சதங்களும் நின்றது. அதற்கு அடுத்து கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் அவர் சாதாரணமாக ரன்கள் எடுப்பதே பெரிய விஷயமாக போனது. அந்தத் தொடரில் மட்டும் தான் சந்தித்த முதல் பந்திலேயே மூன்று முறை ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

Trending

தற்பொழுது இதற்கான காரணங்கள் குறித்து இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் கூறும் பொழுது, “ஒரு நாள் கிரிக்கெட் என்பது அவருக்குள் இருந்த கிரிக்கெட் மேதையை வெளியே கொண்டு வந்த ஒரு கிரிக்கெட் வடிவம். பலர் இந்த விஷயத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். கோவிட் தொற்றுக்குப் பிறகு நாங்கள் அதிக ஒரு நாள் போட்டிகள் விளையாடவில்லை. நாங்கள் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் தான் அதிகம் விளையாடினோம். மிக நீண்ட காலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிகம் உத்வேகத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய வீரராக விராட் கோலி இருந்திருக்கிறார்.

யாருக்குமே மனரீதியான மறு சீரமைப்பு என்பது தேவை. சில நேரங்களில் சில தொடர்களின் போது அவருக்கு தேவையற்ற ஓய்வுகள் வழங்கப்பட்டது. ஆனால் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி மற்றும் டி20 கிரிக்கெட் வெற்றி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து கட்டமைக்கப்பட்டது. அவர் எப்பொழுதும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்துதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை பெறுவார்.

நாங்கள் சமீபத்தில் இது சம்பந்தமாகத்தான் பேசினோம். அவர் என்னுடைய கருத்தில் உடன்பட்டார். எங்கள் அணியும் அவரும் சமீப காலங்களில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாட வில்லை. தற்போது நடந்து வரும் முதல் ஒருநாள் தொடரில் இந்திய அணி மிக எளிதாக வெற்றியை சம்பாதித்தது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement