
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டித் தோல்விக்குப் பிறகு வீரர்களின் உடைமாற்றும் அறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அழுதுகொண்டிருந்ததாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஆமாம். உலகக் கோப்பைத் தோல்விக்குப் பிறகு நாங்கள் மிகுந்த வலியில் இருந்தோம். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அழுதுகொண்டிருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்கே கடினமாக இருந்தது. இந்திய அணி மிகவும் அனுபவம் வாய்ந்தது. ஒவ்வொரு வீரருக்கும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். இந்திய அணி நடப்பு உலகக் கோப்பையை வெற்றிபெறாவிட்டாலும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பெருமை சேர்த்தனர்.