
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9 நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய சிறந்த லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தேர்வுசெய்துள்ளார். இந்த அணியில் அவர் நான்கு இந்திய வீரர்களுக்கும் இடமளித்துள்ளார். அதன்படி, இந்த அணியின் தொடக்க வீரர்களாக நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் இங்கிலாந்தின் அணியின் பென் டக்கெட் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதுதவிர்த்து மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியையும், 4ஆவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரையும் தேர்வுசெய்துள்ள அஸ்வின், அணியின் விக்கெட் கீப்பராக ஜோஷ் இங்கிலிஸைத் தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு அணியின் ஃபினிஷராக தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லருக்கு அஸ்வின் தனது அணியில் வாய்ப்பு வழங்கியுள்ளார்.