
பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்து வரலாறு படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 22ஆவது அரைசதமாகும். இந்த அரைசதத்தின் மூலம் அவர் ஒரு தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். இந்த வடிவத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜடேஜா தனது ஆறாவது அரைசதம் இதுவாகும்,
இதன்மூல்ம் 147 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட ஐம்பது பிளஸ் ஸ்கோர்கள் மற்றும் 75 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீசும்போது 18 போட்டிகளில் 24 இன்னிங்ஸ்களில் 6 ஐம்பது பிளஸ் ஸ்கோர்களையும், 89 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இவருக்கு முன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் வில்பிரட் ரோட்ஸ் மற்றும் இயான் போத்தம் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். ரோட்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில் 10 ஐம்பது பிளஸ் ஸ்கோரும் 109 விக்கெட்டுகளையும், இயன் போத்தம் 10 அரைசதம் பிளஸ் ஸ்கோரும் 148 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ரவீந்திர ஜடேஜாவிற்கு முன் உள்ளனர்.