சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமில்லை - ரிக்கி பாண்டிங்!
உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 243 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது எட்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்தது.
அடுத்ததாக இந்த உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாட இருக்கும் இந்திய அணி அரையிறுதி போட்டியில் எந்த அணியுடன் விளையாட இருக்கிறது என்று குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Trending
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் தனது பிறந்த நாளில் 49ஆவது ஒருநாள் சதத்தை விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு பலரது மத்தியில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் விராட் கோலி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், “உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதைத்தான் நான் நீண்ட நாளாக நீண்ட காலமாக கூறி வருகிறேன். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
அந்த சாதனையை முறியடிக்க வேண்டிய அவசியமில்லை. ஒட்டுமொத்தமாக விராட் கோலியின் பேட்டிங்கை பார்க்கும்போது நம்ப முடியாத வகையில் இருக்கிறது. தற்போது அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 49ஆவது சதத்தை அடித்து விட்டார். சச்சின் டெண்டுல்கரை விட 175 ஆட்டங்கள் குறைவாக விளையாடி அவரின் சாதனையை அவர் சமன் செய்ததை நினைத்துப் பார்க்கும்போது என்னால் நம்ப முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now