ஒரு பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் போல இருக்க வேண்டும் - பஞ்சாப் கிங்ஸ் சிஇஓ!
பஞ்சாப் கிங்ஸ் வீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை அணியின் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் மேனன் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனால் ஐபிஎல் தொடரானது மீண்டும் எப்போது தொடங்கும், இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா? அல்லது வேறு நாட்டிற்கு மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்விகள் எழத்தொடங்கின. இந்நிலையில் ஐபிஎல் தொடரானது திட்டமிட்டப்படி அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை அடுத்த வாரம் முதல் தொடகும் வேலைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போட்டிகளை தென் இந்தியாவில் மட்டும் நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும், எஞ்சிய போட்டிகளுக்கான மறு அட்டவணையை பிசிசிஐ கூடிய விரைவில் அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத்தொடர்ந்து அனைத்து ஐபிஎல் அணிகளும் நாளைக்குள் தங்களின் அணிகளைத் தயாராக வைத்துக்கொள்ளுமாறும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி வருகின்றனர். அந்தவகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் தங்களின் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அணியை ஒருங்கிணைத்து வருகின்றது.
அதிலும் குறிப்பாக சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லை விட்டு வெளியேறி தங்கள் நாட்டிற்குத் திரும்பினர், அதே நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தை அறிந்த பிறகு அணியின் வெளிநாட்டு வீரர்களை இந்தியாவில் தங்கும்படி சமாதானப்பத்தியாதாகவும், அதிலும் குறிப்பாக அவர் விமானத்தில் ஏறிய பிறகும் இந்தா துணைச்சலான முடிவை எடுத்து விமானத்திலிருந்து இறங்கி இந்தியாவில் தங்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
Coach Punter! #IPL2025 #Australia #PunjabKings #RickyPonting pic.twitter.com/EZdu0lnn6C
— CRICKETNMORE (@cricketnmore) May 11, 2025
இது மட்டுமல்ல, அவர் பஞ்சாப் கிங்ஸின் வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அணிக்குத் திரும்பும்படி சமாதானப்படுத்தினார். இதுகுறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் மேனன், "இது ரிக்கி பாண்டிங்கின் குணத்தைக் காட்டுகிறது. அவரால் மட்டுமே இதைச் செய்ய முடியும்" என்று தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்களை அவர் சமாதானம் செய்து இந்தியாவிலேயே இருக்கும் படி செய்தார் என்றும் கூறப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக பஞ்சாப்கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் தர்மசாலாவிலிருந்து ஜலந்தருக்கும், பின்னர் தனி ரயில் மூலம் டெல்லிக்கும் அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து பல வீரர்கள் உடனடியாக தாயம் திரும்ப இருந்த நிலையில் அணியின் தலைமாஇ பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவர்களை சமாதானப்படுத்து ஐபிஎல்லிலேயே இருக்குமாறு அவரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now