Advertisement

பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலியை விமர்சித்த ரிக்கி பாண்டிங், அலிசா ஹீலி!

ஆஸ்திரேலிய அணி வீரர் சம் கொன்ஸ்டாஸிடம் இந்திய வீரர் விராட் கோலி மோதலில் ஈடுபட்டது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Advertisement
பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலியை விமர்சித்த ரிக்கி பாண்டிங், அலிசா ஹீலி!
பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலியை விமர்சித்த ரிக்கி பாண்டிங், அலிசா ஹீலி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 26, 2024 • 10:14 AM

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிற்து. இதில் டஸ் வென்று முதலில் பேட்டிக் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்று அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமத்தது. அதிலும் குறிப்பாக அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 26, 2024 • 10:14 AM

இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவும் அரைசதம் கடந்த நிலையில் 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்துள்ள மார்னஸ் லபுஷாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து வருகின்றனர்.

Trending

இதன்மூலம் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் மார்னஸ் லபுஷாக்னே 44 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் கொன்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி இடையேயான மோதலானது பெரும் பரபரப்பை கிளப்பியது.

இப்போட்டியில் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸை இந்திய வீரர் விராட் கோலி வேண்டுமென்றே இடித்தார். இதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். மேலும் களத்தில் இதுபோல் வீரர்களிடம் நடந்து கொள்வது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானதும் கூட. இதனால் விராட் கோலிக்கு ஐசிசியின் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் அனுபவ வீரரான விராட் கோலி அறிமுக வீரரிடம் இதுபோல் நடந்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கண்டனங்களுக்கு வழி வகுத்துள்ளது. இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “இந்த நிகழ்வின் போது விராட் எங்கு நடக்கிறார் என்று பாருங்கள். விராட் ஒரு முழு ஆடுகளத்தையும் தனது வலது கொண்டு நடந்து அந்த மோதலை ஏற்படுத்தினார். அதனால் இதில் அவர் மீது தான் தாவறு என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் இந்நிகழ்வு குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலீசா ஹீலி, “இது மிகவும் தந்திரமான ஒன்றாக உள்ளது. உங்கள் அனுபவமிக்க வீரர், நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவருமான் ஒருவர் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இது உண்மையில் ஒரு அணியின் சிறந்த செயல் அல்ல. ஆனால் இந்திய அணி அதை அணுக விரும்பும் ஒரு வழி என்றால், அப்படியே ஆகட்டும். ஆனால் அது கொன்ஸ்டாஸை சிறிதும் தடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement