
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படும் நபர் தான் விராட் கோலி. தோனி, சச்சினுக்கு பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விராட் கோலி ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை மீட்டு விட்டார்.
எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக சதம் அடித்தார். அதன் பிறகு மூன்றரை ஆண்டுகளாக அவர் மூன்று இலக்கம் ரன்களை சிவப்பு நிற பந்தில் தொடவில்லை. அதுபோக கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒருமுறை கூட அரை சதம் அடிக்கவில்லை. நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி மொத்தமே 111 ரன்கள் தான் அடித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், “இந்தத் தொடரில் நான் எந்த பேட்ஸ்மேன்களின் பார்மை பற்றியும் கண்டுகொள்ள போவதில்லை. காரணம் பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது. ஆடுகளம் பேட்ஸ்மேன்களை மிகவும் சோதிக்கிறது.