
West Indies tour of India 2025: எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் இடம் பெறுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தன. மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில், ஹாரி புரூக் ஆகியோர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் அக்டோபர் 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.