
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதேசமயம் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய் ஆணி கைப்பற்றும் இரண்டாவது ஐசிசி கோப்பை இதுவாகும். இந்நிலையில் இப்பொட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடை செய்தது.
ஆனால் தான் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தில் இல்லை எனவும், அதனால் இதுகுறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். இந்நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகும், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த பல பேச்சுகள் எழுந்து வருவதாக முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.