கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா புதிய சாதனை!
உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் எனும் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் வழக்கம் போல் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய ரோஹித் சர்மா 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 47 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Trending
இந்நிலையில், உலகக்கோப்பைத் தொடரில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த பேட்டர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று முறியடித்தார். ஒருநாள் போட்டி உலகக்கோப்பைத் தொடரில் கிறிஸ் கெயில் 49 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
ஆனால், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் 50 சிக்ஸர்களை எட்டி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார்.
உலகக்கோப்பைத் தொடரில் 27 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை ரோஹித் சர்மா எட்டியுள்ளார். டிரன்ட் போல்ட் வீசிய 5ஆவது ஓவரில் சிக்ஸர் விளாசியதன் மூலம் இந்த சாதனையை ரோஹித் எட்டினார். 3ஆவது இடத்தில் மேக்ஸ்வெல்(43), டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர்(37) சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now