ஐசிசி தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா சாதனை!
ஐசிசியின் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் முதல் முறையாக விராட் கோலியை முந்தி இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதிலும் முதல் போட்டியி டக் அவுட்டானது இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் சதம், அரைசதம் என அடித்து நொறுக்கினார்.
இந்நிலையில் சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து இந்திய வீரர் ஷுப்மன் கில் ஒருசில புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார்.
Trending
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 84 பந்துகளில் 131 ரன்கள் குவித்து ஒரு சதம் அடித்தார். மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 86 ரன்கள் அடித்து இருந்தார். இதன்மூலம் இந்த தரவரிசைப் பட்டியலில் ரோஹித் சர்மா 6ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். அதேசமயம் விராட் கோலி 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
முன்னதாக 16 ஆண்டுகளாக தரவரிசையில் கோலிக்கு பின்னே மட்டுமே ரோஹித் சர்மா இடம் பெற்று வந்தார். ரோஹித் சர்மா 2007இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரராக ஆன பின்னரும் கூட ரோஹித் சர்மாவால் இத்தனை ஆண்டுகள் கோலி இடத்தை முந்த முடியாமல் இருந்தது. ஆனால், இப்போது அதை உடைத்து ரோஹித் சர்மா முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசில்வுட் முதல் இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இந்தியாவின் முகமது சிராஜும், எட்டாவது இடத்தில் குல்தீப் யாதவும் இருக்கிறார்கள். ஆல் - ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தொடர்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now