
இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் மிகவும் முக்கியமான அபெக்ஸ் கவுன்சில் ஆலோசனைக்கூட்டம் வரும் டிசம்பர் 21ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன்சி, வீரர்கள் தேர்வு என எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
இதில் அணிகளின் திட்டங்களை போலவே வீரர்களின் ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்தம் போட்டு, பிசிசிஐ ஊதியம் நிர்ணயிக்கும். அந்தவகையில் இந்த முறை ரஹானே, இஷாந்த் சர்மா, விருதிமான் சாஹா போன்ற வீரர்களை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் பம்பர் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைத்து ஒப்பந்த இந்திய வீரர்களுக்கும் ஊதிய உயர்வு போடப்படவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுவும் தற்போதைய சம்பளத்தில் இருந்து 20% சதவீதம் வரை கூடுதலாக கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அப்படி பார்த்தால் கோடி கணக்கில் ஊதியங்கள் உயரவுள்ளன.