
வெஸ்ட் இண்டீஸுல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி அங்கு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 தொடருக்கான அணியையும் பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் ஜூலை 12ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி முதல் தர கிரிக்கெட் போன்று இல்லாமல் 2 பயிற்சி போட்டிகளில் விளையாட இருக்கின்றனர். பிசிசிஐ, வெஸ்ட் இண்டீஸிடம் முதல் தர போட்டிகளுக்கு கோரிக்கை விடுத்தது. எனினும், அதற்கு பதிலாக கலப்பு அணியாக இருந்து பயிற்சி போட்டிகளில் விளையாடுகின்றனர்.
அதாவது, சில உள்ளூர் வீரர்களும் இந்த பயிற்சி போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாட இருக்கின்றனர். ரோஸோவில் போதுமான வசதிகள் இல்லாத நிலையில், இந்திய அணி பார்படாஸை தேர்வு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஆண்டிகுவாவில் உள்ள அதிக வசதிகள் கொண்ட கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் தங்க உள்ளனர். டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர்கள் டொமினிகாவுக்கு செல்ல உள்ளனர்.