சாம்பியன்ஸ் கோப்பை 2025: தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
அதன்படி இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
Trending
தோனியின் சாதனை சமன்
அதன்படி இப்போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக தோனி 172 இன்னிங்ஸில் 126 சிக்ஸர்களை அடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது ரோஹித் சர்மா 56 இன்னிங்ஸீல் 126 சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார். இந்தா பட்டியலில் இங்கிலாந்தின் ஈயான் மோர்கன் 147 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்
- இயான் மோர்கன் - 147 சிக்ஸர்கள் (115 இன்னிங்ஸ்)
- ரோஹித் சர்மா - 126 சிக்ஸர்கள் (56 இன்னிங்ஸ்)
- எம்எஸ் தோனி - 126 சிக்ஸர்கள் (172 இன்னிங்ஸ்)
- ரிக்கி பாண்டிங் - 123 சிக்ஸர்கள் (220 இன்னிங்ஸ்)
மூன்றாவது இந்திய கேப்டன்
இதுதவிர்த்து இப்போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் கடந்ததன் மூலம், ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டியில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் முன்னாள் கேப்டன்கள் சௌரவ் கங்குலி மற்றும் எம்எஸ் தோனி மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். அதன்படி கடந்த 2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் சௌரவ் கங்குலி 117 ரன்களையும், அதேசமயம் 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் சாதனை முறியடிப்பு
இந்திய அணியின் கேப்டனாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து அதிக வெற்றிகளைக் குவித்த வீரர்கள் பட்டியலிலும் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த 2012/14ஆம் ஆண்டில் தோனி தலைமையில் இந்திய அணி 12 வெற்றிகளைப் பதிவுசெய்திருந்த நிலையில், தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2024/15 காலகட்டத்தில் 13 வெற்றிகளைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி போட்டிகளில் அதிக தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன்
- 13 - ரோஹித் சர்மா (2024/25)*
- 12 - எம்எஸ் தோனி (2012/14)
- 10 - ரோஹித் சர்மா (2023)
- 8 - சௌரவ் கங்குலி (2003)
- 7 - எம்எஸ் தோனி (2015)
Also Read: Funding To Save Test Cricket
Win Big, Make Your Cricket Tales Now