Advertisement

ரிவர்ஸ் ஸ்விங் குறித்து நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை - இன்ஸமாம் உல் ஹக் காட்டம்!

பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதை உலகுக்கு சொல்லிக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என ரோஹித் சர்மாவிற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக் பதில் கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement
ரிவர்ஸ் ஸ்விங் குறித்து நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை - இன்ஸமாம் உல் ஹக் காட்டம்!
ரிவர்ஸ் ஸ்விங் குறித்து நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை - இன்ஸமாம் உல் ஹக் காட்டம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 29, 2024 • 11:51 AM

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன. இதையடுத்து இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்த அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முன்னதாக இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதுடன், அந்த அணியை தொடரிலிருந்தும் வெளியேற்றியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 29, 2024 • 11:51 AM

இந்நிலையில், அந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். அதற்கு பதிலளித்த  இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இங்கு உள்ள சூழ்நிலைகள் மிகவும் சூடாகவும், வறண்ட ஆடுகளங்களாகவும் உள்ளன. இது போன்ற ஆடுகளங்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை என்றால், வேறு எங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்?. நாங்கள் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை.

Trending

இங்கே, உள்ள மைதானங்களில் 12-15 ஓவர்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது. இது எல்லா அணிகளுக்கும் நடக்கிறது, எங்களுக்கு மட்டுமல்ல. சில நேரங்களில் மக்கள் மனம் திறந்து சிந்திக்க வேண்டும்” என்று தனது பதிலடியைக் கொடுத்திருந்தார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் கருத்தை கேட்ட இன்ஸமாம் உல் ஹக், பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதை உலகுக்கு சொல்லிக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தனது பதில் கருத்தை தெரிவித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இதுகுறித்து பேசிய இன்ஸமாம் உல் ஹக், “முதலில் ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ரோஹித் சர்மா பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனதை ஒப்புக் கொண்டிருக்கிறார். எனவே, நாம் அதை சரியாக கண்டுபிடித்து இருக்கிறோம். இரண்டாவது, ரோஹித் சர்மா எப்படி ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது, எந்த அளவு வெப்பத்தில், எது போன்ற பிட்ச்களில் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என்றெல்லாம் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதை உலகுக்கு சொல்லிக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இப்படி எல்லாம் பேசக்கூடாது என ரோஹித் சர்மாவிடம் கூறுங்கள். மேலும் அவரிடம் நிருபர் தவறான கேள்வியை கேட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் நடுவர்கள் தான் கண்களை திறந்து வைக்க வேண்டும் என்றும், பந்து எப்படி ரிவர்ஸ் ஆகிறது என்பதை பார்க்க வேண்டும் என்றும் தான் கூறினேன். தற்போது நான் அதைமட்டுமே தான் வலியுறுத்துகிறேன். நடுவர்கள் தங்கள் கண்கள் மற்றும் மனதைத் திறந்து வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்த கருத்துகளானது தற்சமயம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement