
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி பாரடர் கவாஸ்கர் கோப்பை காண நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது ஆடி வருகிறது. நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மறுபுறம் ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றும் தகுதியை இழந்துவிட்டது . மேலும் அந்த அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள மீதி இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆவது வெற்றி பெற வேண்டும். இதற்காக அந்த அணி கடுமையாக போராடும். மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலியா அணி முனைப்பு காட்டும்.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நாளை முதல் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிரமான வாய்ப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கமின்ஸ் தனது தாயாரின் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்திரேலியா திரும்பி உள்ளதால் அணியின் துணை கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.