Advertisement
Advertisement
Advertisement

ரோஹித் விளையாடுவதை எதிர்முனையிலிருந்து பார்த்து ரசிக்கலாம் - விராட் கோலி!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில விஷயங்களை மனம் விட்டு பேசி இருக்கிறார். அதில் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் இருவர் பற்றியும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

Advertisement
Rohit Sharma has performed exceptionally well in Tests - Virat Kohli!
Rohit Sharma has performed exceptionally well in Tests - Virat Kohli! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 07, 2023 • 12:13 PM

லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி நான்கு கட்டமாக இங்கிலாந்து சென்று தனது பயிற்சியைத் தொடங்கியது. இந்திய டெஸ்ட் அணியின் வீரர் புஜாரா இங்கிலாந்து கவுண்டி அணிக்கு முன்கூட்டியே விளையாட சென்று விட்டார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 07, 2023 • 12:13 PM

ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மட்டுமே ஐபிஎல் தொடரில் இந்தமுறை அதிக காலம் விளையாடினார். ஸ்மித், லபுஷாக்னே ஆகிய சில வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று கவுன்டி போட்டிகளில் விளையாடினார்கள். உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடம் இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பற்றிய எதிர்பார்ப்பு எக்கச்சக்க அளவில் நிலவுகிறது.

Trending

இந்த சமயத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில விஷயங்களை மனம் விட்டு பேசி இருக்கிறார். அதில் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் இருவர் பற்றியும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய விராட் கோலி, “பேட்டிங்கில் ரோஹித்துக்கு எப்பொழுதும் மற்றவரை விட அதிக டைம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய விதம் அவரது குணாதிசயத்தைக் காட்டியது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க இடத்தில் விளையாடுவது கடினமானது. அவர் அதில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக அவர் விளையாடும் பொழுது எதிர் முனையிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.

டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்டத்தில் தாக்கத்தைத் தரக்கூடிய வீரர். அவர் விளையாட ஆரம்பிக்கும் பொழுது உங்களிடமிருந்து ஆட்டத்தை அப்படியே எடுத்து விடுவார். யாராவது அவரை உடனடியாக ஆட்டமிழக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் சீக்கிரத்தில் அவர் தொடர்ந்து உங்களைக் காயப்படுத்த ஆரம்பிப்பார். அவர் ஆபத்தான வீரர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement