நியூசிலாந்து போட்டியில் ரோஹித் விளையாடுவது சந்தேகம்?
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேச மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் சுற்று இத்தொடரை விட்டு வெளியேறியுள்ளன. அதேசமயம் மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதிலிருந்து எந்த இரு இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
அதேசமயம் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்திருப்பதாகவும், இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டில் ஓய்வளிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு தொடை பகுதில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அணியின் பயிற்சி அமர்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை. இதனால் காயத்தால் அவதிப்பட்டு அவ்ரும் ரோஹித் சர்மா முழு உடற்தகுதியை எட்டாத நிலையில், நியூசிலாந்து போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அரையிறுதி போட்டியில் விளையாட வைக்க பிசிசிஐ திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் இந்திய அணியை ஷுப்மான் கில் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் ஷுப்மன் கில் அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஆல்லது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும். அதேசமயம் ஷுப்மன் கில்லுடன் இணைந்து கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரோஹித் சர்மா காயமடைந்துள்ள தகவல் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.
Win Big, Make Your Cricket Tales Now