
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் தலைமையின் கீழ் பிட்னஸ் விடயத்தில் பெரும் முன்னேற்றத்தை கண்ட இந்திய கிரிக்கெட் அணியானது நல்ல உடற்தகுதி வாய்ந்த உலகின் நம்பர் ஒன் அணியாக மாறியது. அதன் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள் அனைவருமே ஃபிட்னஸ் விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டோடு இருந்து வருகின்றனர்.
குறிப்பாக கூடுதல் எடை அதிகரிக்காமல் நல்ல உடல் வலிமையை பெற்று களத்தில் வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே தனியாக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அதோடு இந்திய அணியில் பிட்னஸிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அதற்கென ஒரு பயிற்சியாளரையும் அமைத்து தொடர்ச்சியாக வீரர்கள் போட்டிகளில் விளையாடி வரும் போதும் அவர்களுக்கான உடற்தகுதி பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக யோ-யோ டெஸ்ட் தேர்வில் தேர்ச்சி அடையும் வீரர்களே இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு ஃபிட்னஸ் பெரிய முக்கியத்துவத்தினை பெற்றுள்ளது. இந்நிலையில் ரோஹித் சர்மா சற்று உடல் பருமனாக இருந்தாலும் அவர் களத்தில் விராட் கோலிக்கு நிகராக செயல்படுகிறார் என இந்திய அணியின் உடற்தகுதி நிபுணரான அங்கீத் காலியார் என்பவர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.