ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி - டிராவிஸ் ஹெட்!
ரோஹித் சர்மா தான் தற்போது உலகின் அதிர்ஷ்டமில்லாதவராக உணருவார் என உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக கோப்பையை வென்றது. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 240 மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து 241 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 7, ஸ்மித் 3, மார்ஷ் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் டிராவிஸ் ஹெட் அதிரடியாக சதமடித்து 137 ரன்கள் எடுத்தார். அவருடன் மிடில் ஆர்டரில் சவாலை கொடுத்த லபுஷாக்னே 58 ரன்கள் எடுத்ததால் 43 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா வலுவான இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மேலும் இப்போட்டியில் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கும் காரணமாக திகழ்ந்த டர்வீஸ் ஹெட் இறுதி போட்டிக்கான ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Trending
ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் டர்வீஸ், “இதை எல்லாம் நான் யோசித்து கூட பார்த்தது இல்லை என்பதே உண்மை. இந்த நாள் எங்களுக்கு மிக சிறப்பானதாக மாறிவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் எனது பங்களிப்பும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் எதிர்கொண்ட முதல் 10 முதல் 20 பந்துகள் எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது. மிட்செல் மார்ஸ் எடுத்த ரன்கள் குறைவாக இருந்தாலும், அவர் சரியான அடித்தளத்தை அமைத்து கொடுத்தார் என்பதே உண்மை.
மிட்செல் மார்ஷ் விளையாடியதன் மூலமே எனக்கும் உத்வேகம் கிடைத்தது. டாஸ் வென்ற போது எங்கள் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது மிக சிறந்த முடிவு. ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தது என்பதால் நான் அதற்கு ஏற்ப விளையாடினேன். ரோஹித் சர்மா தான் தற்போது உலகின் அதிர்ஷ்டமில்லாதவராக உணருவார். நான் இறுதி போட்டியில் சதம் அடிப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now