
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை இந்தியா கைப்பற்றி இருக்கும் நிலையில் தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து ஐந்து போட்டிகளை கொண்ட டி20 தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. சமீபகாலமாகவே டி20 போட்டி தொடர்களில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்தியா விளையாடிய அனைத்து டி20 போட்டிகளிலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோருக்கு தொடர் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
இதனால் அவர்கள் இருவரும் அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் பங்கேற்பார்களா என்ற சந்தேகமும் ரசிகர்கள் பலருக்கும் எழுந்திருக்கிறது இதுகுறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார் இந்தியாவின் அனைத்து வடிவ கேப்டனான ரோஹித் சர்மா.