
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (மார்ச் 9) நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஒருவர் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவும் பட்சத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின் அடிப்படியில், “சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவினால், இந்திய அணி கேப்ட்ன் ரோஹித் சர்மா ஓய்வு பெற வாய்ப்புள்ளது. மறுபுறம், இந்திய அணி கோப்பையை வென்றால், ரோஹித்தின் முடிவு என்ன என்பது இப்போதைக்கு முடிவு செய்யப்படவில்லை. இரண்டு சூழ்நிலைகளிலும், ஓய்வு பெறுவதா இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்வார்” என்று கூறியுள்ளனர்.