ஐபிஎல் 2025: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை நெருங்கிவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்திவுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 63அவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக இரு அணி வீரர்களும் இப்போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
7000 ஐபிஎல் ரன்கள்
அதன்படி இப்போட்டியில் ரோஹித் சர்மா 72 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் 7000 ரன்களை பூர்த்தி செய்வார். இதனை அவர் எட்டும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் 7000 ரன்களை கடந்த இரண்டாவாது வீரர் எனும் பெரும்பையைப் பெறுவார். இதுவரை விராஅட் கோலி மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்லார். ரோஹித் சர்மா இதுவரை ஐபிஎல் தொடரில் 268 போட்டிகளில் 263 இன்னிங்ஸ்களில் விளையாடி 6928 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் 300 சிக்ஸர்கள்
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மேலும் மூன்று சிக்ஸர்கள் அடித்தால், ஐபிஎல் தொடரில் தனது 300 சிக்ஸர்களை பூர்த்தி செய்வதுடன், இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் 358 சிக்ஸர்களை அடித்துள்ள நிலையில், ரோஹித் சர்மா 297 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியாலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 550 சிக்ஸர்கள்
Also Read: LIVE Cricket Score
இதுதவிர்த்து ரோஹித் சர்மா மேலும் 8 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 550 சிக்ஸர்களை பூர்த்தி செய்வார். இதன்மூலம் இந்திய அணி தரப்பில் இந்த சாதனையை படைக்கும் முதல் வீரர் மற்றும் உலகளவில் 7ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதுவரை கிறிஸ் கெய்ல், கீரோன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸ்ஸல், நிக்கோலஸ் பூரன், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now