
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் மீதான விமர்சனங்களும் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு எதிரான விமர்சனங்களும் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன . கடந்த 2021 ஆம் ஆண்டின் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாகவும் இருந்து வருகிறார் .
இவரது தலைமையின் கீழ் இந்திய அணி உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் ஐசிசி போட்டித் தொடர்களிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது . இதற்கு எதிராக பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கடுமையான விமர்சனங்களை கூறி வருகின்றனர் .
மேலும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கடந்த ஒரு வருடங்களாகவே சிறப்பானதாக இல்லை . ஒரு தொடரில் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடும் அவர் மற்ற போட்டிகளில் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறுகிறார் . இதனால் அவர் மீதான அழுத்தமும் விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன .