
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்த அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முன்னதாக இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதுடன், அந்த அணியை தொடரிலிருந்தும் வெளியேற்றியது. இந்நிலையில், இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் 15ஆவது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். 15ஆவது ஓவரிலிருந்தே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கியதால் நடுவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும். அதாவது 12-13ஆவது ஓவருக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. இதை பாகிஸ்தானில் ஏதாவது ஒரு வீரர் செய்திருந்தால் ஒருவேளை கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் சொல்கிறேன்.