யார் நம்பர் 4 இல் களமிறங்குவார்? - ரோஹித் சர்மா பதில்!
உலகக்கோப்பைத் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயரால் பங்கேற்க முடியுமா என்ற ரசிகர்கள் கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் எல்லா அணிகளும் ஈடுபட்டு இருக்கின்றன. சொந்த நாட்டில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இதனால் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் உருவாகி இருக்கிறது.
இதனுடன் சேர்ந்து ஒரு நாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டிய மிக முக்கிய வீரர்கள் காயத்தில் இருப்பது அணியை மிகவும் பின்னடைவுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு தேவையான இடங்களுக்கு கண்டறியப்பட வேண்டிய வீரர்களை, தற்போது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் விளையாட வைத்து பரிசோதிக்கும் அளவுக்கு நிலைமை மிகவும் சிக்கலாக இருக்கிறது.
Trending
தற்பொழுது இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கும் கேஎல்.ராகுல் அணிக்குத் திரும்புவாரா? இரண்டாவது விக்கெட் கீப்பர் இஷான் கிஷ்னா அல்லது சஞ்சு சாம்சனா? இந்திய அணிக்கு நான்காவது இடத்தில் விளையாடப் போவது, காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ஸ்ரேயாஸ் ஐயரா இல்லை சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் யாதவா? என்பது போன்ற பல கேள்விகள் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறாத இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வெஸ்ட் இண்டீஸ்க்கு அருகில் உள்ள அமெரிக்க நாட்டின் மகாணமான கலிபோர்னிய மாகாணத்தில், தன்னுடைய கிரிக்கெட் அகாடமியை துவக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பல முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
அதில் பங்கேற்று பேசிய ரோஹித் சர்மா பேசும் பொழுது, “ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இன்னும் முழுமையான ஃபிட்னஸை எட்டவில்லை. அதற்கான முயற்சியில் இருக்கிறார். அதனால் உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் வாய்ப்பு வழங்குவது ஏன் என்பது தெளிவாகியுள்ளது. ஒருவேளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயரால் பங்கேற்க முடியவில்லை என்றால், சூர்யகுமார் மற்றும் சாம்சனை வைத்து உலகக்கோப்பை எதிர்கொள்வதே இந்திய அணியின் திட்டமாக உள்ளது ரசிகர்களுக்கு தெளிவாகிறது.
Win Big, Make Your Cricket Tales Now