
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 251 ஒருநாள் போட்டிகள், 148 டி20 போட்டிகள் மற்றும் 52 டெஸ்ட் போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 450 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். அதோடு எதிர்வரும் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியையும் கேப்டனாக வழிநடத்த காத்திருக்கிறார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அப்போதைய பேட்ஸ்மேன்கள் பகுதிநேர பந்துவீச்சாளராக இருந்தது தான் காரணம் என்று பல்வேறு பேச்சுக்கள் தற்போதும் நிலவி வருகிறது.
அதோடு தற்போதைய இந்திய அணியில் பந்துவீச தெரிந்த பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை என்றும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது கடந்த 2009ஆம் ஆண்டு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ரோஹித் தற்போதெல்லாம் பந்து வீசாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலை தற்போது ஒரு பிரத்யேக நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொண்ட விசயம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.