இங்கிலாந்து புறப்படும் ரோஹித் சர்மா!
England vs India: ரோஹித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றும், அவர் ஜூன் 20 அன்று இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான டி20 தொடர் முடிந்த பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த மாதம் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கும் 2
போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயரை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.
இந்த தொடர் முடிந்ததும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக 5 போட்டிகள் கொண்ட தொடர் 4 போட்டிகளோடு முடித்துக் கொள்ளப்பட்டது.
Trending
இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மீதம் இருக்கும் ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7 அன்றும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12 அன்றும் தொடங்குகின்றன.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் சிலர், இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். விராட் கோலி, சுப்மன் கில், ஷர்துல் தாக்குர், பும்ரா, சிராஜ், புஜாரா, ஷமி, ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
காயத்தால் அவதிப்பட்டு வந்த ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்திருந்த நிலையில், அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பது உறுதியாகியுள்ளது. ரோகித் சர்மா வரும் ஜூன் 20 அன்று இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். தொடைப் பகுதியில் காயமடைந்திருக்கும் கே.எல்.ராகுல், இங்கிலாந்து உடனான டெஸ்ட்டுக்கு முன்பாக காயத்திலிருந்து முழுமையாக மீள வாய்ப்பில்லை எனத் தெரிவதால், அவா் அந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
Win Big, Make Your Cricket Tales Now