
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கரோனா தொற்று காரணமாக விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா பேட்டிங்கில் அதிக ரன்களை குவித்து இருந்தார். ஆனால் பிளேயிங் லெவனில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது .
முதல் இன்னிங்ஸில் கூட ரோஹித் சர்மா இல்லாததால் புஜாரா தொடக்க வீரராக களமிறங்கி சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 98 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . பந்த் , ஜடேஜா ஜோடி இந்திய அணி சரிவிலிருந்து மீட்டது. இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வரும் ஏழாம் தேதி தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதில் ரோகித் சர்மா விளையாடுவாரா? மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது . ஆனால் கரோனாவில் இருந்து ரோஹித் சர்மா மீண்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. ரோஹித் சர்மாவுக்கு நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனையில் கரோனா தொற்று இல்லை என முடிவு வந்தது. இதனை அடுத்து ஒரு வார காலம் ஹோட்டலில் தனிமையில் இருந்த ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைய உள்ளார்.