Advertisement

முதல் ஓவரிலேயே நடையைக் கட்டிய ரோஹித் சர்மா - வைரல் காணொளி!

இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிரது.

Advertisement
முதல் ஓவரிலேயே நடையைக் கட்டிய ரோஹித் சர்மா - வைரல் காணொளி!
முதல் ஓவரிலேயே நடையைக் கட்டிய ரோஹித் சர்மா - வைரல் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 02, 2023 • 02:33 PM

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் புள்ளிப்பட்டியளின் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. அதேசமயம் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி வாய்ப்புகாக போராடி வருகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 02, 2023 • 02:33 PM

இந்நிலையில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Trending

இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் ஹெம்ந்தா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷங்கா முதல் ஓவரை வீசினார். இன்னிங்ஸின் முதல் பந்தை பவுண்டரிகளுக்கு அனுப்பிய ரோஹித் சர்மா, இரண்டாவது பந்தை கணிக்க தவறி க்ளீன் போல்டாகி 4 ரன்களுக்குடன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இதையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி ஷுப்மன் கில்லுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ரோஹித் சர்மா க்ளீன் போல்டான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement