
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு கிரிக்கெட் தொடருக்கு பிறகு வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பாட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் சக அணி வீரர் ஹாரி புரூக் தன்னை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ் போட்டியில் ஹாரி ப்ரூக் சோபிக்க தவறினார். இதன் காரணமாக ஜோ ரூட் மீண்டும் தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்த மாற்றங்களைத் தவிர்த்து டாப் 10 வரிசையில் வேறெந்த மாற்றமும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டாப் 10 தரவரிசையில் இந்திய அணியைச் சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்தையும், ரிஷப் பந்த் 9ஆம் இடத்தையும் தக்கவைத்து கொண்டுள்ளனர். டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்திலும், டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும் நீடித்து வருகின்றனர்.