அலெஸ்டர் குக்கின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார் ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கக அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஷான் மசூத், அகா சல்மான் மற்றும் அப்துல்லா ஷஃபிக் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
Trending
இதனால் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஸாக் கிரௌலி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் தொடர்ந்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸாக் கிரௌலி 78 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் ஜோ ரூட்டுடன் இணைந்த பென் டக்கெட் வழக்கம் போல் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் நிதான அட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோ ரூட் தனது அரைசதத்தை பதிவுசெய்த நிலையில், அதிரடியாக விளையாடிய டக்கெட்டும் தனது அரைசத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி தற்போது வரை 2 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களைச் சேர்த்துள்ளது.
Joe Root. England's Greatest!#PAKvENG #England #Cricket #JoeRoot pic.twitter.com/IKVylNWZPX
— CRICKETNMORE (@cricketnmore) October 9, 2024
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம், அந்த அணிக்காக புது வரலாற்று சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் அலெஸ்டர் குக்குன் சாதனையை முறியடித்து ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக அலெஸ்டர் குக் 12,472 ரன்களைச் சேர்த்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது.
Joe Root is closing in on!#Cricket #PAKvENG #England #JoeRoot pic.twitter.com/WWNpxAcHga
— CRICKETNMORE (@cricketnmore) October 9, 2024
Also Read: Funding To Save Test Cricket
அதனைத்தற்போது ஜோ ரூட் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். மேற்கொண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலிலும் ஜோ ரூட் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ள நிலையில், அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now