
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய மார்க் வுட், ரெஹான் அஹ்மத் ஆகியோருக்கு பதிலாக ஒல்லி ராபின்சன் மற்றும் சோயப் பஷீர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இத்தொடரின் தொடர்ந்து சொதப்பி வரும் ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட் ஆகியோருக்கு இப்போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “இத்தொடரில் ஜானி பேர்ஸ்டோவ் நன்றாக பேட்டிங் செய்யாதது குறித்து கடுமையான கேள்விக்குறி இருக்க வேண்டு. ஏனெனில் அவர் ஒவ்வொரு முறையும் பந்தை சரியாக கணிக்க முடியாமலும், மோசமான ஷாட்டுகளையும் விளையாடியும் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். ஆனாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.