SA vs PAK: இரட்டை சதமடித்து சாதனைகளை குவித்த ரியான் ரிக்கெல்டன்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதமடித்தது சில சாதனைகளை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா மற்றும் கைல் வெர்ரைன் ஆகியோரும் சதங்களை விளாசிய நிலையில், இறுதியில் மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 615 ரன்களைச் சேர்த்து ஆல் ஆவுட்டானது.
Trending
இதில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 259 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்களையும், கைல் வெர்ரைன் 100 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வாரும் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஜாக் காலிஸை பின்தள்ளினார்
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வீரர் ரியான் ரிக்கெல்டன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில், இப்போட்டியில் ரியான் ரிக்கேல்டன் தனது இரட்டை சதத்தை 266 பந்துகளில் பூர்த்தி செய்தார், இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்ததன் அடிப்படையில் ஜாக் காலிஸை முந்தி நான்காவது இடத்தைப் பிடித்தார். இதற்கு முன் கடந்த 2010ஆம் ஆண்டில் செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஜாக் காலிஸ் 267 பந்துகளில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் அப்பிரிக்காவுக்கான அதிவேக இரட்டை சதமடித்த வீரர்கள்
- 211 - ஹெர்ஷல் கிப்ஸ் va பாகிஸ்தான், கேப் டவுன், 2003
- 238 - கிரேம் ஸ்மித் vs வங்கதேசம், சிட்டகாங், 2008
- 251 - கேரி கிர்ஸ்டன் vs ஜிம்பாப்வே, ஹராரே, 2001
- 266 - ரியான் ரிக்கெல்டன் vs பாகிஸ்தான், கேப் டவுன், 2025
- 267 - ஜாக் காலிஸ் vs இந்தியா, செஞ்சுரியன், 2010
உலகின் நான்காவது வீரர்
இதுதவிர்த்து இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வழக்கமான தொடக்க் வீரர் டோனி டி ஸோர்ஸி காயம் காரணமாக விளையாடாத நிலையில் ரியான் ரிக்கெல்டன் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கினார். அவ்வாறு களமிறங்கிய அவர் இரட்டை சதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கி இரட்டை சதம் அடித்த உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் பிரண்டன் குருப்பு, கிரேம் ஸ்மித், டெவான் கான்வே ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
டெஸ்டில் முதல் முறையாக ஓப்பனிங் செய்யும்போது இரட்டை சதமடித்த வீரர்
- 204* - ரியான் ரிக்கெல்டன் (SA) vs PAK, கேப்டவுன், 2025
- 201* - பிரெண்டன் குருப்பு (SL) vs NZ, கொழும்பு, 1987
- 200 - கிரேம் ஸ்மித் (SA) vs BAN, கிழக்கு லண்டன், 2002
- 200 - டெவோன் கான்வே (NZ) vs ENG, லார்ட்ஸ், 2021
நான்காவது தென் ஆப்பிரிக்க வீரர்
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த நான்காவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் ரியான் ரிக்கல்டன் பெற்றுள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாமபவான்கள் ஏபி டி வில்லியர்ஸ் 278 ரன்களையும், கிரேம் ஸ்மித் 234 ரன்களையும், ஹர்ஷல் கிப்ஸ் 228 ரன்களையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now