டெஸ்ட் போட்டிகள் மிகவும் ஸ்பெஷலாகும் - விராட் & ரோஹித்!
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் வந்தாலும் ஒரு வீரரின் உண்மையான திறமையை சோதிக்கும் இது போன்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தங்களுக்கு பெரியது என்று விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நம்பர் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இது, செஞ்சூரியன் நகரில் நடைபெறவுள்ளது. இத்தொடரை வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் அடங்கிய வலுவான இந்திய அணி களமிறங்க உள்ளது.
சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் விளையாடிய விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் இத்தொடரில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 765 ரன்கள் குவித்த விராட் கோலி ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரராக மாபெரும் உலக சாதனை படைத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
Trending
அதேபோல இறுதிப்போட்டி உட்பட அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா கிட்டத்தட்ட 600 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி நல்ல ஃபார்மில் உள்ளார். அதனால் இந்த 2 ஜாம்பவான் வீரர்களும் இம்முறை தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க போராடுவார்கள் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இந்நிலையில் என்ன தான் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் வந்தாலும் ஒரு வீரரின் உண்மையான திறமையை சோதிக்கும் இது போன்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தங்களுக்கு பெரியது என்று விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய விராட் கோலி, “என்னை பொறுத்த வரை கிரிக்கெட்டுக்கு டெஸ்ட் போட்டிகள் தான் அடித்தளம். அதுவே வரலாறு மற்றும் கலாச்சாரம்.
இதில் அனைத்தும் 4 அல்லது 5வது நாள் முடிவில் தான் உங்களுக்கு கிடைக்கும். ஒரு வீரராக உங்களுடைய அணிக்கு பெரிய இன்னிங்ஸ் விளையாடுவது பெரிய திருப்தியை கொடுக்கும். இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் டெஸ்ட் போட்டிகள் எப்போதுமே எனக்கு ஸ்பெஷலாகும். கலாச்சாரத்தை விரும்பும் எனக்கு டெஸ்ட் போட்டிகள் தான் அனைத்துமாகும். அதைப் பார்த்து வளர்ந்த நான் 100 போட்டிகளில் என்னுடைய நாட்டுக்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
அவரைத்தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா, “டெஸ்ட் போட்டிகள் மிகவும் ஸ்பெஷலாகும். விளையாட்டு வீரராக நீங்கள் ஒவ்வொரு நாளும் சவாலை விரும்புகிறீர்கள். ஒரு டெஸ்ட் போட்டி வெல்வதற்கு நீங்கள் 5 நாட்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். எனவே என்னை பொறுத்த வரை டெஸ்ட் போட்டிகள் தான் உங்களை ஒரு மனிதராகவும் கிரிக்கெட்டராகவும் வீரராகவும் சோதனை செய்யக்கூடிய இடமாகும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now