
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் பும்ரா வரும் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐந்து மாதத்திற்கு முன்பு கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப மாட்டார் என்றும் அவருடைய காயம் குணமடைந்த பிறகு இந்திய அணிக்காக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பும்ரா குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம், “பும்ராவின் காயத்தை நாம் பார்த்தால் அவர் தன்னுடைய பந்து வீசும் ஸ்டைலையே மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. பும்ரா நீண்ட காலத்திற்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைத்தால் அவர் எந்த கிரிக்கெட்டில் விளையாட போகிறோம் என்பதை தேர்வு செய்து பங்கேற்க வேண்டும்.
தற்போதுள்ள சூழலில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் தேர்வு குழுவினரும் பும்ரா இல்லாமல் ஒரு பந்து வீச்சு படையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதை உணர்ந்து இருப்பார்கள். அதற்காக முதலில் பும்ரா இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களை தயார் செய்ய வேண்டும். பும்ரா பந்து வீசும் முறையால் அவருடைய முதுகில் அழுத்தம் அதிக அளவில் ஏற்படுகிறது.