
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை இம்மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இத்தொடரில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற தங்களது கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தான் தேர்வுசெய்துள்ள அணியை அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள அணியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஷிவம் தூபேவுக்கு இடம் அளிக்கவில்லை. அவர் தேர்வுசெய்துள்ள அணியில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடக்க வீரர் இடங்களை கொடுத்துள்ளார்.