
இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணியானது மூன்று போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்க அணி ஒரு வெற்றியையும் பதிவுசெய்தது. இதன்மூலம் இந்திய அணி இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
மேலும் இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 2 சதங்களையும், பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் பந்துவீச்சிலும் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் சதமடித்து அசத்திய சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
இருப்பினும் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தொடரின் கடைசி போட்டியிலும் சதமடித்து அசத்தியதுடன், ஒரே ஆண்டில் மூன்று சர்வதேச டி20 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்து அசத்தினார். அதிலும் குறிப்பாக இத்தொடரில் மட்டும் அவர் 20 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். இதன்மூலம் தற்சமயம் மற்றொரு சாதனைக்கும் சஞ்சு சாம்சன் சொந்தக்காரராகியுள்ளார்.